×
 

ரவுடி ஆதி கொலை விவகாரம்... மேலும் இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்... SSI அதிரடி சஸ்பெண்ட்..!

ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆதி என்ற ரவுடி பிரசவத்திற்காக மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்ப்பதற்காக சென்னை கீழ்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அவர் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் கொண்ட ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழக முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருந்த காவல்துறையினர் மீது நிச்சயமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர், தெரிவித்தார்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்துள்ளதாக கூறினார். மேலும், கொலை தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். வழக்கமாக பத்து காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார், என்பது தொடர்பாக விசாரிக்க ஒன்பது தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: சேலத்தில் நிகழ்ந்த படுகொலை... வேட்டையாடும் வன்முறைக் கும்பல்..! திமுகவை தோலுரித்த தவெக…!

ரவுடி ஆதி கொலை வழக்கு தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேருக்கு போலீசார் வலைவீசி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த கொலை சம்பவம் எதிரொலியாக எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: அஜித்குமார் கொலை வழக்கு... ADSP முன்ஜாமின் தள்ளுபடி... கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share