சேலத்தில் நிகழ்ந்த படுகொலை... வேட்டையாடும் வன்முறைக் கும்பல்..! திமுகவை தோலுரித்த தவெக…!
சேலத்தில் நிகழ்ந்த படுகொலையை சுட்டிக்காட்டி திமுகவை தமிழக வெற்றிக் கழகம் சாட்டியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி அருகே ஜான்சன்பேட்டையில், மகனைக் காப்பாற்ற முயன்ற 67 வயது மூதாட்டி சின்னபிள்ளை, ஆயுதம் தாங்கிய கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள தமிழக வெற்றிக் கழகம் திமுக அரசை சாடியுள்ளது. வயதானவர் என்றும் பாராமல், வீட்டிற்குள்ளேயே புகுந்து இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலையை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது என்று தெரிவித்து உள்ளது.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, திமுக ஆட்சியில் அராஜகக் காடாக மாறிவருகிறது என்றும் தலைநகரம் முதல் கடைகோடி கிராமம் வரை படுகொலைகளும், பட்டப்பகல் வன்முறைகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன என்றும் கூறியுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அரங்கேறிய கொலை, அரும்பாக்கத்தில் பெண் தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரம், தற்போது சேலத்தில் வீடு புகுந்து நடத்தப்பட்ட படுகொலை எனத் தொடரும் வன்முறைகள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன என்று தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: மோடிஜி உங்க எண்ணம் பலிக்காது..! ஜனநாயகனுக்கு ராகுல்காந்தி ஆதரவு..!
குற்றவாளிகளுக்குக் காவல்துறை மீதோ, சட்டத்தின் மீதோ துளியும் அச்சம் இல்லை என்பதையே இந்தத் தொடர் நிகழ்வுகள் பறைசாற்றுவதாக கூறப்பட்டு உள்ளது. விளம்பர அரசியலிலும், தேர்தல் நாடகங்களிலும் மட்டுமே குறியாக இருக்கும் திமுக அரசு, மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. நிர்வாகச் சீர்கேட்டின் உச்சத்தில் தமிழகத்தை நிறுத்தியுள்ள இந்த அரசு, மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தவெக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சென்னை திரும்பினார் விஜய்..! சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது? தவெக விளக்கம்..!