×
 

கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!

முதலில் விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்து வர சொல்லுங்கள் என்று ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்தார்.

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விமர்சனம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுகவின் கூட்டணியை "கல்லாப்பெட்டி கூட்டணி" என்று அழைத்தது தான். இது நேற்று வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. விஜய் தனது உரையில், திமுகவின் ஆட்சி குறித்தும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

தனது ஆட்சி வந்தால் என்னென்ன செய்வோம் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரடியாகக் குறிப்பிட்டு, "அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், யாராவது நிழலுக்கு ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார்" என்று கிண்டலுடன் கூறினார். திமுக கூட்டணிக்கு "கல்லாப்பெட்டி கூட்டணி" என்று பெயர் சூட்டியிருப்பதாக விஜய் தெரிவித்தார்.

"ரொம்ப கஷ்டப்பட்டு இந்த கல்லாப்பெட்டி கூட்டணியை சேர்த்திருக்கிறார்" என்று நையாண்டியாகவும் பேசினார். இதன் மூலம் திமுகவின் கூட்டணி உத்தி பண ஆதிக்கத்தால் மட்டுமே நிலைத்திருப்பதாகவும், அது மக்களால் ஏற்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படிங்க: மனநோயா? பாசிச மனநிலையா? மாற்றுத்திறனாளிகளை வதைக்கும் திமுக... ஆதவ் அர்ஜுனா சாடல்..!

கல்லாப்பெட்டி கூட்டணி என விமர்சித்த விஜய்க்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். விஜய் முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள் என்று கூறினார். வருமான வரி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நபர் தான் விஜய் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஏன் மோடியை பற்றி விஜய் பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: சேலத்தில் விஜய்... பூமழை பொழிந்த தொண்டர்கள்..! உற்சாக வரவேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share