பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்..?
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேற்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலில் முப்படையினருக்கும் முழுச்சுதந்திரம் அளித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்த நிலையில் மோகன் பாகவத், பிரதமர் மோடியைச் சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக பெரிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு ராஜங்கரீதியாக இந்திய பதிலடி கொடுத்து வருகிறது, ஆனால், ராணுவரீதியாக பதிலடி கொடுக்கவில்லை. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று கூடி ஆலோசித்த நிலையில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தருவதற்கு முப்படையினருக்கும் முழுச்சுதந்திரம் அளித்து ஒப்புதல் அளித்தது.
இதையும் படிங்க: ‘நம்முடைய தர்மம் குண்டர்களுக்கு பாடம் புகட்டுவதுதான்’.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சூசகம்..!
இந்த முடிவு எடுக்கப்பட்ட சில மணிநேரத்தில் டெல்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று இரவு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு ஏறக்குறைய ஒருமணிநேரம் வரை நீடித்தது. காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம், இந்தியாவின் பதிலடி நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை பாதுகாப்பு அதிகாரி அனில் சவுகான், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து கூறுகையில் “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பிரதமர் மோடிஇருவருக்கும் இடையிலான சந்தித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. காஷ்மீர் குறித்துதான் இருவரும் முழுமையாக ஆலோசித்துள்ளனர். பாதுகாப்புபடைக்கு முழுச்சுதந்திரம் அளித்து பதில் நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தார். இந்த நேரத்தில் உயர்மட்ட அளவில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு அரிதாக நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மோகன் பாகவத் “இந்து தர்மம் என்பது அடிவாங்குவது அல்லது, திருப்பிக் கொடுத்து பாடம் கற்பிப்பதுதான். மன்னரின் கடமை மக்களைக் காப்பது, மன்னர் தனது கடமையை கண்டிப்பாகச் செய்ய வேண்டும்” என பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ‘நம்முடைய தர்மம் குண்டர்களுக்கு பாடம் புகட்டுவதுதான்’.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சூசகம்..!