×
 

மாமியார் ஜிபே-க்கு மாறிய கைதிகளின் காசு... சீட்டிங் சிறைவார்டன் சஸ்பெண்ட்...!

சேலம் மத்திய சிறையில் தின்பண்டங்களுக்காக  சிறை கைதிகளிடம் பெற்ற பணத்தை மாமியாரின் ஜி பே- வுக்கு கைமாற்றிய சிறைவார்டன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மத்திய சிறைச்சாலையில் 1200 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக சிறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படும்  பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கைதிகளிடம் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அவர்களிடம் இருந்து பணம் பெறப்படும்.  இந்த விற்பனை பிரிவில் சுப்ரமணியம் என்ற வார்டன் பணியாற்றி வந்தார்.  இவர் கைதிகளுக்கு பொருட்களை விற்பனை செய்தவுடன்,  அதன் மூலம் பெறப்படும் பணத்தை சிறை நிர்வாகத்திற்கு கணக்கு  காட்ட வேண்டும் . 

ஆனால்  அவர் , தின்பண்டத்திற்கான பணத்தை  Gpay  மூலம் அனுப்புமாறு கூறி ஒரு ஜிபே எண்ணை  கைதிகளிடம் கூறியுள்ளார். அந்த எண்ணில் சிறை கைதிகள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கான பணத்தை Gpay செய்து வந்தனர். இந்த நிலையில் பேக்கரியில் விற்பனை செய்யும் பணம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனை எடுத்து சிறை அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணை நடத்திய போது , தாங்கள் வாங்கும்  தின்பண்டத்திற்கு ,  சிறை வார்டன் சுப்பிரமணியம் கொடுத்த  Gpay  எண்ணில் தான் பணம்  செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: இனி கூகுல் பே பண்ணாலும் ஜிஸ்டியா? இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? புலம்பும் மக்கள்!!

இதனையடுத்து அந்த Gpay எண்  யாருடையது என விசாரித்த போது ,  அந்த எண் சிறைவார்டன் சுப்பிரமணியத்தின் மாமியார் கண்ணகி என்பவரின் பெயரில் இருந்தது தெரிய வந்தது.  கடந்த ஓராண்டாக சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியார் கண்ணகியின்  Gpay  எண்ணிற்கு  மட்டும் கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை சென்றிருந்தது. இந்த பணம் அனைத்தும் சிறை  கணக்கிற்கு வந்திருக்க வேண்டும்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் இது குறித்து சிறைத்துறை ஏடிஜிபி-க்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரின் உத்தரவு பேரில்,  சேலம் சிறை கண்காணிப்பாளர் வினோத் அவர்கள்,  சிறை வார்டன் சுப்பிரமணியத்தை சஸ்பெண்ட்  செய்து நேற்று மாலை உத்தரவிட்டார். இது சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முக்கிய வழக்கில் தீர்ப்பு... எடப்பாடிக்கு காத்திருக்கும் ஆப்பு - எச்சரித்த மு.க.ஸ்டாலின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share