50+ பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மீண்டும் கைது... ஜாமீனில் வெளியே வந்தவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!
பெண்களை தன் வசப்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தவெக பிரமுகர் மணிகண்டன் , ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைது
கடன் வாங்கியதற்காக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு பெண் அளித்த புகாரில் காவல்துறையினர் , மணிகண்டனை மீண்டும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சின்னப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் மணிகண்டன்.
தவெக பிரமுகரான இவர், அந்தப் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்தக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை இளைஞர்களுக்கு விற்றதாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் உள்ளது.
இந்நிலையில் வறுமையில் சிக்கி தவிக்கும் பெண்களுக்கு வலைவீசி , அவர்களிடம் பணம் கடனாக தருவதாக ஆசை வார்த்தை கூறி , அவர்களை தன் வசப்படுத்தி உறவு கொண்டதோடு , அதை ஆபாச வீடியோ எடுத்து , தன் நண்பர்களிடமும் செல்ல வேண்டுமென ஆபாச வீடியோவை காட்டி , மிரட்டியதாக பெண் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார், தவெக நிர்வாகி மணிகண்டனை பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: #BREAKING சேலத்தில் பயங்கரம்... தனியாக வசித்து வந்த முதிய தம்பதி நகைக்காக அடித்துக்கொலை...!
மேலும் காவல்துறையினர் , மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி சம்பவத்தை போல மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டையா மணிகண்டன் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
ஆனால் கைதான மணிகண்டன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினர் இவ்வழக்கை முறையாக விசாரிக்காததால் , மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் ஜாமினில் வெளியே வந்ததை அறிந்த பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மணிகண்டனிடம் கடன் பெற்றிருப்பதாகவும் , அந்த கடனை திருப்பி செலுத்திட கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையிடம் புகார் ஒன்றை நேற்று அளித்தார்.
இதனையடுத்து தவெக பிரமுகர் மணிகண்டனை போலீசார், இன்று மீண்டும் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட போது முறையாக விசாரணை நடத்திடமால் , சேலம் மாநகர காவல் துறையினர் அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே அவர் வெளியே வந்துள்ளார் என்றும் தற்போது மீண்டும் அவர் மீது புகார் பெறப்பட்டுள்ளதால் , இந்த சம்பவம் குறித்து உரிய முழுமையான விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பல் கோரிக்கை வலுத்துள்ளது..
இதையும் படிங்க: சேலத்தில் மூடியே கிடக்கும் அம்பேத்கர் சிலை. விரைவில் திறப்புவிழா... அமைச்சர் வன்னியரசு உறுதி..!!