யார் கூட கூட்டணி... எத்தனை சீட்?... எல்லாம் எடப்பாடி கண்ட்ரோல்... நழுவிய செல்லூர் ராஜு
கூட்டணி உள்ளிட்டவை தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் முடிவே இறுதியானது என செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றி கழகத்தை அதிமுக கூவி கூவி கூட்டணிக்கு அழைப்பதாக டிடிவி தினகரன் பேசியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரசியலில் அடையாளம் தெரிவதற்காக அதிமுகவை விமர்சிக்கின்றனர் என்று கூறினார். முக்குலத்தோறை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டுவதாகவும், அது பொய் என்றும் தெரிவித்தார்.
அரசியலின் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுக மீதான விமர்சனங்களை முன் வைப்பதாக தெரிவித்தார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் விஜயை கூட்டணிக்கு அடைப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
தங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாடுதான் தங்களின் நிலைப்பாடு என்றும், கட்சியின் மூத்த தலைவர்கள் அவரவர் எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். திமுகவின் நிலைப்பாட்டை தான் அவர்கள் எடுத்துரைப்பதாகவும், ஒரு புதிய கட்சியை திமுக வளர விடாது என்பதை தான் அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் என்றும் அந்த வகையில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: "விரைவில் ஒரு விரல் புரட்சி வெடிக்கும்"... விஜய் ஸ்டைலில் திமுகவை எச்சரித்த செல்லூர் ராஜூ...!
யாருடன் கூட்டணி என்பது குறித்தும் எத்தனை சீட் என்பது தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்றும் அதற்குள் தேவையற்ற கருத்துக்களை கூறுவது வேண்டாம் எனவும் தெரிவித்தார். திருமாவளவன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, முன்பு இருந்த திருமா வேறு இப்போது இருக்கும் திருமா வேறு என்றும் கருத்துக்களை மாறி மாறி அவர் பேசி வருவதாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூங்கா அமைக்க எதிர்ப்பு... செல்லூர் ராஜூவை சூழ்ந்த பெண்கள்... மதுரையில் சர்ச்சை...!