சாம்சங் ஊழியர்கள் செம்ம குஷி...முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!
சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு தொழிலாளர் நலத்துறையிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, துணை தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் இணை ஆணையர், தொழிலாளர் கூடுதல் ஆணையர் தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அடுத்த 2 ஆண்டுகள் முறையே ரூ.4,000, ரூ.4,500 ஊதிய உயர்வு வழங்கவும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு தொழிலாளிக்கு ரூ,18 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மிரட்டும் பாக்., சொல்லி அடிக்கும் இந்தியா..! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை..!