×
 

அதிகாரம் கையில கிடைச்சா இப்படியா பண்ணுவீங்க? ஒரே அராஜகம்.. விளாசிய இபிஎஸ்..!

கரூரில் சட்டவிரோத மணல் கொள்ளையை தட்டிக் கேட்டவர்களை தாக்கியுள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

கரூரில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதை தட்டி கேட்டவர்களை திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கி உள்ளதாகவும் அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் அள்ளியதை தட்டி கேட்டவர்கள் தாக்கப்பட்ட சமூகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும் , அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை என்று எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.

காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார். 11.05 மணிக்கு மண் அள்ளலாம் என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் என்றும் மணல் கொள்ளையை தட்டி கேட்டால் கொள்ளையர்களின் பதில் மிரட்டல் மற்றும் கொலை என்று கூறியுள்ளார். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல.,அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். மேலும் இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக தெரிகிறது என்று கூறிய அவர், மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்

இதையும் படிங்க: கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share