#BREAKING: தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவில் தடை விதிக்க முடியாது... ஐகோர்ட் திட்டவட்டம்!
தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
பணி நிரந்தரம், தனியார் மையமாக்குதலுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற சமூக முடிவு ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை அடுத்து தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. கலைந்து செல்ல மறுத்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். பல மணி நேரம் அடைத்து வைத்திருந்து பின்பு விடுவிக்கப்பட்டனர். தமிழக அரசு தங்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லை என்றும் திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் காவல்துறை அராஜக போக்குடன் செயல்படுவதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு மாநகராட்சி இணைந்து பேசி தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே வழங்கும் ஊதியத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் தூய்மை பணியாளர்களின் ஊதிய விவகாரத்தில் தமிழக அரசு தனியார் நிறுவனத்தோடு பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ADMK பொதுச் செயலாளர் விவகாரம்... இபிஎஸ் மனு தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது
இதையும் படிங்க: தேவநாதன் சொத்து விபரம் எங்கே? முழு தகவலை கொடுங்க.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!