×
 

#BREAKING: எங்கள சீண்டாதீங்க! போராட்டம் வெடிக்கும்.. கலைந்து செல்ல தூய்மை பணியாளர்கள் மறுப்பு..!

நீதிமன்ற தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கலைந்து செல்ல மாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 7 கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. 13 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வணக்க தொடரப்பட்ட நிலையில், அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுபவர்களை அப்புறப்படுத்துங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அருகில் மருத்துவமனை உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அபாண்டமா பொய் பேசாதீங்க..! தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டை மறுத்த கே.என் நேரு..!

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நாங்கள் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு எதிராகப் போ அல்லது போராட்டத்திற்கு எதிராகவோ இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தனர்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தவும் நீதிபதிகள் அனுமதித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை இயக்க தூய்மை பணியாளர்கள் மறுத்துள்ளனர். ரிப்பன் மாளிகை முன்பு இருந்து கலந்து செல்ல மறுத்துள்ளனர். அமைதியாக தாங்கள் போராடி வருவதாகவும் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் தாங்கள் இடைஞ்சல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

மாநகராட்சி அலுவலகம் முன்பு தான் போராட முடியும்., தனியாக மைதானத்தில் எதற்காக நாங்கள் போராட வேண்டும்., நாங்கள் விளையாட வா செல்கிறோம் எனக் கேட்டுள்ளனர்.

நீதிமன்றமும் அரசாங்கமும் எங்களை கைவிட்டு விட்டார்கள் இன்று வேதனை தெரிவித்த தூய்மை பணியாளர்கள், தங்களின் அமைதியான போராட்டத்தை ஜெயிக்க விடுங்கள் என்றும் மாநகராட்சி அலுவலகம் முன்புதான் போராடுவோம் எனவும் தெரிவித்தனர். 

பணி நிரந்தரம் செய்து அனைவரையும் அனுப்பி விடுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று கூறிய அவர்கள், நீதிமன்றம் தங்களுக்காக பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தங்களை சீண்டினால் போராட்டம் வீரியம் எடுக்கும் என்றும் தங்கள் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்றும் எச்சரித்தனர்.

இதையும் படிங்க: நாங்க என்ன எதிரியா? போலி பிம்பத்தை கட்டமைக்குறாங்க! ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share