பழையபடி வேலை வேணும்... எங்களால முடியல.! தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்... !
சென்னை எழும்பூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: சபாஷ்...! தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு... ரூ.186 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு...!
அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, 3 வேளை உணவு என பல அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டலம் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பி, போராடி வருகின்றனர். பழையபடி மாநகராட்சியில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: முடிஞ்சுது தீபாவளி... சென்னையில் இத்தனை மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளா? அதிர்ச்சி ரிப்போர்ட்...!