கோட்டை நோக்கி பேரணி..! போராடும் தூய்மை பணியாளர்கள்... குண்டு கட்டாக கைது..!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாகச் சென்ற தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகரின் தூய்மையைக் காத்து நிற்கும் தூய்மைப் பணியாளர்கள், தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு. வி. க. நகர் மண்டலங்களில் பணியாற்றிய இவர்கள், தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராகவும், பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் மாதக்கணக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் நூற்றுக்கணக்கான நாட்களைக் கடந்த நிலையில், தங்கள் குரலை உயர் அதிகாரிகளிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தலைமைச் செயலகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் திட்டமிட்டனர்.பாரிமுனை பகுதியில் குறளகத்திலிருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கிப் பேரணி தொடங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இதற்கு முன்பே நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். பிராட்வே பேருந்து நிலையம் அருகே பணியாளர்கள் ஒன்று கூடியதும், அவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர். பெண்கள் உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளிப்பட்டன. இந்த நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்.. குண்டு கட்டாக கைது..!
இந்தப் பணியாளர்களின் முக்கியக் கோரிக்கை பணி நிரந்தரமே. பல ஆண்டுகளாக மாநகராட்சிக்குக் கீழ் பணியாற்றிய இவர்கள், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். தனியார்மயமாக்கலைக் கைவிட்டு, தங்களை நிரந்தரப் பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவ் போது போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். தங்கள் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!