வீடூர் அணை திறந்தாச்சு! வெள்ளம் பாயும்... சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...!
வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வீடூர் அணையிலிருந்து ஆறு தென்கிழக்கு திசையில் சங்கராபரணி ஆறு பாய்கிறது. ராதாபுரம் என்ற இடத்தில் பம்பையார் என்ற கிளை இணைந்து, சங்கராபரணி ஆற்றின் அகலத்தை அதிகரிக்கிறது. இதன் பின், சங்கராபரணி புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் மனலிபேட்டில் நுழைகிறது. செல்லிபேட்டில் பம்பை என்ற மற்றொரு கிளை சேர்ந்து, போட் ஹவுஸ் அருகில் கூடுவையார் என்ற கடைசி கிளை இணைகிறது. இந்த இடத்தில், ஆறு சுன்னம்பார் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இரண்டு கிலோமீட்டர்கள் பாய்ந்து, பரடைஸ் கடற்கரையில் வங்கக்கடலில் கலந்து முடிகிறது. இது சுமார் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு உதவுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 46 மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் சேமிக்கப்படுகிறது. சங்கராபரணி ஆறு, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வீடியோ அனுப்புறியா? இன்டர்னல் மார்க்ல கை வைக்கவா.. பாலியல் தொல்லை குறித்து மாணவியின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ..!
இதனால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி, ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: காலை வாரிவிட்ட மழை..!! குறைந்தது வரத்து..! கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை..!!