கண் இமைக்கும் நேரத்தில் கோரம்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காரும் வேணும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு. 10 க்கும் மேற்பட்டோர் காயம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் பழக்கடை வியாபாரம் செய்து வருகிறார். அவரது குடும்பத்தினருடன் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் கிராமத்தில் உள்ள கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சிக்காக வேணில் சென்று கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியில் இருந்து உதயசங்கர், மருது இளையராஜா மூவரும் தார் காரில் குற்றாலம் சென்று கொண்டிருந்தனர். சங்கரன்கோவில் - கழுகுமலை சாலையில் ராமநாதபுரம் விளக்கு அருகே காரும் வேனும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.
கார் மற்றும் வேனில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் காரில் பயணம் செய்த இளையராஜா மற்றும் மருது ஆகிய இருவரும் உயிர் இழந்த நிலையில், உதயசங்கர் உயிர் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!
வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலையில் சங்கரன்கோவிலை அருகே காரும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!