×
 

புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு சசிகலா அழைப்பு விடுத்தார்.

2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் குழப்பங்களின் உச்சமாக சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவருக்கு எதிரான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடும் எதிர்ப்பு, குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியின் நிலைப்பாடு காரணமாக, 2017 டிசம்பரில் சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனுடன் அவரது உறவினர் டி.டி.வி. தினகரனும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். இந்த நீக்கம் கட்சியின் பொதுக்குழுவால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சசிகலாவின் நீக்கத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை ஒருங்கிணைத்து தலைமை தாங்கி வருகிறார். சசிகலா சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு, அவ்வப்போது அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், கட்சியை ஒருங்கிணைத்து திமுகவை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக சசிகலா தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணிகள் தற்போது கூட்டணி அமைத்து விட்டது. இருப்பினும் சசிகலா இது தலையிடாமல் இருந்து வருகிறார். அவர் புதிய கட்சி தொடங்குவார் என்றும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: மோதல்..! சசிகலாவை சந்தித்த அமமுக நிர்வாகி... கட்சியை விட்டே நீக்கிய TTV தினகரன்..!

இந்த நிலையில், வரும் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்க ஒன்றுபடுவோம் என்று கூறியுள்ளார். ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்றும் கூறினார். வரும் 24ம் தேதி சசிகலா புதிய கட்சி ஆரம்பிப்பதாக அறிவிப்பார் என்று பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: NDA- வில் உறவாடும் TTV... தனிக்கட்சி தொடங்கும் சசிகலா..? ஆதரவாளர்களை களம் இறக்க திட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share