×
 

உன் வாய்… உன் உருட்டு! அதிமுக மேல தப்புதான் - சசிகலா பரபரப்பு பிரஸ்மீட்

தூய்மை பணியாளர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தி வருவதாக கூறப்பட்டது.தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதை அடுத்து நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும், காலை உணவு வழங்கப்படும், காப்பீடு தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. பணி நிரந்தரம் கேட்ட தூய்மை பணியாளர்களை இது போன்ற திட்டங்கள் கொடுப்பதாக கூறி மழுப்புவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பணி நிரந்தரம் செய்யப்படும் வரை தாங்கள் ஓய மாட்டோம் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை சுட்டிக்காட்டி அதிமுக ஆட்சி காலத்தில் 10 மண்டலங்களை தனியாருக்கு ஒப்படைத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது, அதிமுக மீது தவறு இருப்பதாக தெரிவித்தார். யார் செய்திருந்தாலும் தவறுதான் என்றும் கூறினார். எழுத்துப்பூர்வமாக கொடுத்ததை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் தொகுப்பு வீடுகள், காலை உணவு என இன்னும் நான்கு மாதங்களுக்கு என்னென்ன சொல்ல முடியுமோ சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். நிச்சயம் 2026 இல் திமுக ஆட்சி அமைக்காத என்றும் மக்கள் விட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எழில்வனத்தை நாசமாக்காதீங்க! அங்க ஆபீஸ் வெக்குறது அறிவில்லாத செயல்.. சீமான் காட்டம்..!

இதையும் படிங்க: 51 மாசத்துல ரூ.50 ஆயிரம் சேமிப்பு..! விடியல் பயணம் மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடு.. முதல்வர் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share