×
 

வயநாட்டைப் புரட்டிய நிலச்சரிவு..! 7 பேரை காணவில்லை... கேரள முதல்வர் சதீசன் பரபரப்பு பேட்டி..!

கேரளாவில் நடந்த நிலச்சரிவில் இதுவரை 7 பேர் காணவில்லை என அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்தார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி பகுதியில் இன்று கனமழை தூண்டிய பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஏழு பேர் காணாமல் போய்விட்டதாக அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அனக்கம்பொயில்-கள்ளாடி-மேப்பாடி இரட்டை சுரங்கச் சாலை திட்டத்தின் கட்டுமானப் பகுதியில், மீனாட்சி பாலத்துக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதி 2024ஆம் ஆண்டு பெரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை அருகே அமைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 20 பேர் மண்ணில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழை காரணமாக மலைப்பகுதியின் ஒரு பெரும் பகுதி இடிந்து விழுந்து, கீழே உள்ள சாலை மற்றும் அருகிலுள்ள ஓடையில் பெரும் அளவு மண், கற்கள் மற்றும் குப்பைகளைப் பரப்பியது. இந்த நிலச்சரிவு கட்டுமானத் தளத்தில் பணியாற்றியவர்கள், வாகனங்கள் அல்லது பாதசாரிகள் சிக்கியிருக்கலாம் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 20 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நிலச்சரிவில் அந்த பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்று முழுமையாக மண்ணில் புதைந்திருக்கிறது. விபத்து நடந்த போது சுமார் 20 பேர் அங்கு இருந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். வயநாடு சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெறும் கல்லாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்தது. இருப்பினும் ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்படும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "ஆபரேஷன் டூஃபான்" விவகாரம்..!! தமிழ்நாட்டின் கவனத்திற்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்..!!

இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் ஏழு பேரை காணவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் சதீசன் தெரிவித்துள்ளார். வயநாடு அருகே ஏற்பட்ட மண்சரிவிலிருந்து நீக்கப்பட்ட ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மண்ணை அகற்றுமாறு கடந்த ஜூன் இருபதாம் தேதியே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்றும் முதல்வர் சதீஷன் விளக்கம் கொடுத்திருக்கிறார். துரதிஷ்டவசமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share