×
 

"அரசியல் அனாதை திமுக"..! அதிமுக ஒழியனும்னு எடப்பாடி நினைக்கிறாரு..! சவுக்கு சங்கர் பகிரங்க குற்றச்சாட்டு..!

Youtuber சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சாதாரண அரசு ஊழியராகத் தொடங்கி, ஊழல் வெளிப்பாட்டாளராகவும், யூடியூப் ஊடகவியலாளராகவும் உருவெடுத்த சவுக்கு சங்கர் சமீபத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. வேறு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்ற பட்சத்தில் உடனடியாக சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியாகுவார் எனக் கூறப்பட்டது. பிறகு சிறையில் இருந்து வெளிவந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சனங்களை முன் வைத்தார்.

உங்கள் வீட்டில் சாக்கடை ஊற்றும் போது எடப்பாடி பழனிச்சாமி தான் குரல் கொடுத்தார் என்றும் அவரை எதிர்த்து தற்போது பேசுவது ஏன் எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், என் வீட்டில் சாக்கடை ஊற்றும் போது எடப்பாடி குரல் குடுத்தார் என்பதற்காக காலம் முழுவதும் அடிமையாய் இருக்க முடியாது என்று கூறினார். அதிமுக ஒழிய வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் நினைக்கிறதா என்ற கேள்வி எழுப்பியதற்கு அதிமுக ஒழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தான் நினைக்கிறார் என்றும் தமிழக வெற்றி கழகம் கிடைக்கவில்லை என்றும் பதில் கொடுத்தார்.

கடந்த ஆட்சியில் ஆளும் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதனால் எனது நண்பர் பெலிக்ஸ் மீதி 20 வழக்குகள் பதிவு செய்தனர்,bவிலை உயர்ந்த கேமராக்கள் , MAC Editing system, பறிமுதல் செய்தனர், இன்னமும் அவரால் பெற முடியவில்லை என சவுக்கு சங்கர் கூறினார். த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா..? என்ற செய்தியாளர் கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் அளித்தார்.

இதையும் படிங்க: அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

இந்த ஆட்சி அவ்வளவு சீக்கிரம் விழுந்து விடாது என்று நினைப்பதாகவும் எதிர்கட்சிகள் அதற்கான வேலைகளை செய்வார்கள் எனவும் தெரிவித்தார். இன்று தீண்ட தகாத கட்சியாய் அரசியல் அனாதையாகிவிட்டது திமுக என்று விமர்சனம் செய்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் தலையிடுவார் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share