×
 

"முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் முதலமைச்சரின் உத்தரவுப்படி முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்

மறைந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் உடல், மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் முறைப்படி அறிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உணர்வுப்பூர்வமாகப் பேசியதாவது: "தமிழ் திரையுலகில் அதுவரை நிலவி வந்த பல்வேறு எழுதப்படாத விதிகளைத் தகர்த்தெறிந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. வெள்ளை தோலுக்கு மட்டுமே விசில் அடித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், சாமானிய கருப்பு தோலுக்கும் கதவை திறக்க வைத்துப் புரட்சியை ஏற்படுத்தியவர் அவர்தான். திரையுலகில் இன்று ஜொலிக்கும் எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. அவர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்களின் பட்டியலை நாம் வாசிக்கத் தொடங்கினால் அதற்கு நேரமே போதாது."

 

"சர்வதேச அளவில் ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் ஒரு சிறந்த திசைகாட்டியாகத் திகழ்ந்த மாபெரும் ஆளுமையை நாம் தற்பொழுது இழந்திருக்கிறோம். அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். திரையுலகிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற கலைச் சேவையைப் போற்றும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க, பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த அரசு மரியாதையில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கலந்து கொண்டு, அவருக்கான இறுதி மரியாதையைச் செலுத்த இருக்கிறார்" என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

மேலும், இயக்குநர் பாரதிராஜா அவர்களின் இறுதி ஆசை மற்றும் விருப்பத்தின்படியே, அவரது உடல் சென்னைக்குக் கொண்டு செல்லப்படாமல், அவரது சொந்த ஊரிலேயே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அவரது சொந்த ஊரை நோக்கித் தற்பொழுது புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.

 

இதையும் படிங்க: விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share