நெல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... பள்ளி பஸ், வேனுக்கு தீ வைத்து எரிப்பு...!
பள்ளிக்கு பெற்றொரை அழைத்து வர கட்டாயப்படுத்தியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மானாபுரம் நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர குமார் வயது 43. இவரது மகன் சபரி கண்ணன் வயது 15. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
இந்தப் பள்ளியில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாணவன் தவறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் 7ம் தேதி மாணவனை அங்கிருந்து ஆசிரியர்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வருமாறு கூறியுள்ள நிலையில் அச்சமடைந்த மாணவன் பூச்சி மருந்தை சாப்பிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: மகனுக்கு மந்திரி பதவி.... பாஜகவுடன் டீல்... அப்செட்டில் வைகோ ...!
இதனால் பள்ளியில் 7ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாணவன் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவன் அங்கு இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு மாணவன் அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் மதுரையில் சிகிச்சையில் இருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாணவனின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டு பள்ளி தாளாளர் தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான 1 பஸ், 2 வெனை எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி.. 27 வீரர்கள் பலி, அவர்களைக் கொன்றது யார்?