மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
அக்டோபர் 5 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டின் முதல் பருவத்திற்கான காலாண்டுத் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவ மாணவிகளுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விடுமுறைக் காலம் தொடங்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விடுமுறைக் காலம் முடிவுற்றவுடன், அக்டோபர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இரண்டாம் பருவ வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன.காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 16 அல்லது 17 ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான வகுப்புகளுக்கு இந்த தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. சில தனியார் பள்ளிகளில், குறிப்பாக தொடக்க நிலை வகுப்புகளில், தேர்வுகள் சற்று முன்னதாகவே முடிவடைவதால், அங்குள்ள மாணவர்களுக்கு ஒன்பது நாட்களுக்குப் பதிலாக பத்து நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விடுமுறைக் காலத்தில் காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை நாளும் அடங்கியுள்ளதால், மாணவர்கள் தொடர்ச்சியான ஓய் வைப் பெறுகின்றனர்.பள்ளிக் கல்வித் துறை இந்த விடுமுறைக் காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதைத் தடை செய்துள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், விடுமுறை நாட்களில் எந்தவிதமான கூடுதல் வகுப்புகளையும் ஏற்பாடு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!
குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளில் விடுமுறைக் காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் வழக்கம் இருந்ததைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டிலேயே சுயபயிற்சி செய்யும் வகையில் பணித்தாள் வினாக்களை வழங்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தைப் படிக்குமாறு வழிகாட்டலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!