×
 

தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி! கனிமொழியுடனான சந்திப்பிற்கு பின் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!

 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் இன்று முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவுக்கு வராதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனிமொழியுடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய கிரிஷ் சோடங்கர், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. இருப்பினும், ராஜ்யசபா இடங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு (Seat Sharing) இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியிலேயே உள்ளது எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தரப்பிலிருந்து மாநிலங்களவை இடங்கள் (Rajya Sabha) மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு ஒதுக்கீடுகள் குறித்து நேர்மறையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. மற்ற விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், முதலில் சட்டமன்றத் தொகுதிப் பங்கீட்டை நாம் முடிக்க வேண்டும். அது ஒன்றே இப்போது நிலுவையில் உள்ள முக்கியப் பணி என சோடங்கர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!


காங்கிரஸ் தரப்பில் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்கள் கேட்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், திமுக தலைமை அதனைப் பரிசீலித்து வருவதால் இந்த இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு: தலைமையே முடிவெடுக்கும்! ராகுல் - கனிமொழி சந்திப்பை விமர்சித்த EPS-க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share