×
 

விவசாயத்தை பாழாக்கும் விதை சட்ட வரைவு... பேராபத்து..! சீமான் கடும் எச்சரிக்கை...!

விதை சட்ட வரைவு 2025ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

வேளாண் பெருங்குடி மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் விதை சட்ட வரைவு 2025 என்ற புதிய சட்ட வரைவினை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேளாண்மையைப் பெருநிறுவன தொழிலாக்கி, உணவளித்து உயிர் காக்கும் விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றும் சதித்திட்டமே இக்கொடும் சட்ட வரைவு என்று தெரிவித்தார்.

இப்புதிய வரைவின் படி, இனி நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட விதைகளை மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய முடியும் என்றும் அவ்வாறு விற்கப்படும் விதைகளின் முளைப்பு விகிதம் உள்ளிட்ட பிற விவரங்களை ஆய்ந்தறிந்து ஒட்டுத்தாள்களில் வெளியிட வேண்டும் என்ற வரைவு விதியின் மூலம் பெருநிறுவனங்கள் மட்டுமே இனி விதைகளைச் சந்தைகளில் விற்க முடியும் என்ற நிலையை உருவாக்க முனைகிறது மத்திய அரசு என்று கூறினார். 

இப்புதிய சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், இனி இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு வேளாண் பெருங்குடி மகனும், எந்தவொரு விதையை வாங்க வேண்டும் என்றாலும் ஒன்றிய அரசு அங்கீகரித்த அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்களிடம் மட்டுமே வாங்கி விதைக்க முடியும் என்றும் அதுமட்டுமின்றி மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் ஒரு முறை மட்டுமே முளைக்கும் திறன் பெற்ற விதைகள் என்று, இனி விதை விற்பனை நிறுவனங்கள் முடிவு செய்யும் விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெயரிலேயே காந்தம்... திரை பேராளுமை... ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து...!

விளைநிலங்களைப் பறித்து, விவசாயிகளை அகதிகளாக்கி, வேளாண்மையைத் தனியார் பெருநிறுவனத் தொழிலாக்கும் விதை சட்ட வரைவு - 2025ஐ இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக்கூடாது என்றும், உடனடியாக இப்புதிய சட்ட வரைவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: பி. ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை... அரசு செய்தால் சட்டம்... சாமானியன் செய்தால் குற்றமா? சீமான் கொந்தளிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share