×
 

பொருட்செலவை வைத்து திரைக்கலையை மதிப்பிடுவதா? சல்லியர்கள் படத்திற்கு சீமான் ஆதரவு...!

சல்லியர்கள் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்து இருப்பதாகவும் மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது என்றும் ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும் எனவும் கூறினார். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே என சீமான் கூறினார்.

அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயல் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலைமுறைகளை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்... வாட்டி வதைக்காதீர்கள்... சீமான் கண்டனம்...!

தடைகளையும், நெருக்கடிகளையும் தாண்டி சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் வெளியாகி உள்ளது என்றும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு உள்ளார்.

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர்... சொன்னா கேக்க மாட்டீங்களா? நாதகவினர், போலீஸ் இடையே வாக்குவாதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share