வா...வா... சீமான்..! தோளில் கை போட்டு அழைத்து வந்த வைகோ..!
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் சீமான் தோளில் கை போட்டு வைகோ அழைத்து வந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி ஒரு மாபெரும் விழா நிகழ்கிறது. அது, சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா தேவர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கர் தேவர் சிலைக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, இன்று 118 ஆவது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணனின், டிடிவி தினகரன், சசிகலா உட்பட ஏராளமான அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது முத்துராமலிங்க தேவர் பெருமைகளை எடுத்துரைத்தார். வைகோ செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த இடத்திற்கு வந்தார். சீமான் வருவதை அறிந்ததும் வைகோ தனது பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு விரைந்து சென்று, சீமானின் தோளில் கை போட்டு மகிழ்ச்சியுடன் அழைத்து வந்தார்.
இதையும் படிங்க: சீமானுக்கு அதைப் பற்றி பேச அருகதை கிடையாது... டிஐஜி வருண்குமார் வழக்கறிஞர் காட்டம்...!
தான் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு ஓடோடி வந்து என்னை பார்த்தவர் சீமான் என்றும், தமிழ் உணர்வை ஊட்டியவர் சீமான் எனவும், தனது தாய் இறந்த போது இரவோடு இரவாக வந்து துணை நின்றவர் சீமான் என்றும் வைகோ புகழாரம் சூட்டினார். அரசியலில் இரு துருவங்களாக அறியப்படும் தமிழ்தேசியம் மற்றும் திராவிட கொள்கைகளை பின்பற்றும் சீமான் மற்றும் வைகோ இருவரும் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக அரவணைத்துக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வரலாற்று திரிபு திட்டமிட்ட சதி... அருண்மொழிச் சோழன் பிறந்தநாளே சதய விழா..! தமிழக அரசை வலியுறுத்திய சீமான்...!