×
 

சீமானுடன் ஓயாத பஞ்சாயத்து! வருண் குமார் ஐபிஎஸ் திடீர் டிரான்ஸ்பர்...

சீமானுடன் பஞ்சாயத்து இன்னும் ஓயாத நிலையில், டிஐஜி வருண்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான வருண் குமார் ஆகியோருக்கு இடையேயான கருத்து மோதல்களால் தொடங்கி, சட்டரீதியான மோதல்கள் வரை விரிவடைந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததன் மூலம் அவர், சீமான் தனக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்ததாகவும், இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும் கூறி, 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கோரினார். 

இதற்கு பதிலளித்த சீமான், தனது கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, 13 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இயங்கி வருவதாகவும், வருண் குமாரின் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்தார். 

இதையும் படிங்க: செத்து சாம்பல் ஆனாலும் தனிச்சு தான் போட்டி! யாரும் அசைக்க முடியாது... சீமான் திட்டவட்டம்

இதற்கு மறுப்பு தெரிவித்த வருண் குமார், சீமானே தன்னிடம் மன்னிப்பு கேட்க தூது அனுப்பியதாக கூறினார். இவர்கள் பஞ்சாயத்து இன்னும் ஓயாத நிலையில், டிஐஜி வருண்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணிவிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விஜிலென்ஸ் டிஜிபியாக இருந்த பிரமோத் குமார், ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில குற்ற ஆவண காப்பகத்தின் கூடுதல் டிஜிபியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி, விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும், ஊர்க்காவல் படை ஐஜியாக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, திருச்சி டிஐஜி வருண் குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் பலகட்ட எதிர்ப்பு மற்றும் வழக்குகளை தொடுத்து வந்த நிலையில் வருண் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போராடும் தூய்மை பணியாளர்கள்.. செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share