×
 

பேசி முடிக்கிறீங்களா... கோர்ட்டுக்கு வரீங்களா? சீமான் - விஜயலட்சுமியை எச்சரித்த நீதிமன்றம்…!

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜய லட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், தானே சென்று தலையைக் கொடுத்தது போல, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பு கோரியது. வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றமோ, 3 மாத காலத்துக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து, சீமானுக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை, அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. அதனை கிழித்த விவகாரம், களேபரமாக மாறியது ஒருபக்கம் இருக்கும்போது, ஆதரவாளர்கள் சூழ விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விசாரணைக்கு உடன்பட்டார். சீமான் கைதாகி விடுவாரோ என்ற பேச்சுக்கள் அடிப்பட்ட நிலையில், அவரை கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்து விட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனுத்தாக்கல் செய்தது.

இவை அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்த்தப் படுவதாகவும், விசாரணையை நிறுத்தி வைக்குமாறும் சீமான் தரப்பு கோரியது. சமாரசமாக பேசி முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றம் கூறி, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் மீது விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க: பாஜக கொள்கை எதிரினா காங்கிரஸ் கொள்கை நண்பனா? சீமான் சரமாரி கேள்வி...!

பாலியல் வழக்கில் சீமானுக்கு எதிராக கூடுதல் மனு தாக்கல் செய்ய நடிகை விஜயலட்சுமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. சீமான் தொடர்ந்து தன்னை குறித்து அவதூறாக பேசுகிறார் என்றும் அவதூறு பிரச்சாரம் தொடர்பாக கூடுதல் மனுத் தாக்கல் செய்கிறோம் என்றும் நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீமான் அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது. திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார் என சீமான் மீது நடிகை தரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இதனை அடுத்து நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சீமானும் நடிகை விஜயலட்சுமி ஒருவருக்கொருவர் பேசி மன்னிப்பு கேட்டுக் கொண்டு பிரச்சனையை முடித்துக் கொள்ள வேண்டும் அல்லது இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைக்க நேரிடும் என்று எச்சரித்தது.

இதையும் படிங்க: சீமான்... அந்த அணிலு? செல்வப் பெருந்தகை கேள்வியால் சிரிப்பலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share