சீமான்... அந்த அணிலு? செல்வப் பெருந்தகை கேள்வியால் சிரிப்பலை...!
அணில் பிரச்சனை தான் வேகமாக போயிட்டு இருக்கு என சீமானிடம் செல்வப் பெருந்தகை கேட்க சிரிப்பலை ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோனேரி கொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை கிண்டல் அடித்து பேசினார்.
தமிழக வெற்றி கழக தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துவதாக கூறினார். அது தனக்கு தலைவிதி தலைவிதி என்று கேட்பதாக கிண்டல் அடித்தார். மேலும் மேலும் சரி எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால் TVK TVK என்ன கத்துவதாகவும் டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்து இருக்கிறீர்கள் என்றும் சீமான் கிண்டல் அடித்தது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், புலி வேட்டைக்கு செல்லும்போது வழியில் அணில்கள் கோரி ஓடுவதாகவும் பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள் என்றும் தெரிவித்தார். அணிலே ஓரமாய் போய் விளையாடு., குறுக்கே வராது என்றும் அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்றும் சீமான் பேசினார்.
இதையும் படிங்க: திமுக கண்டுக்காம வேடிக்கை பாக்குது! MRF பணியாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்...!
அப்போது தொடங்கி விஜய் தொண்டர்களை சீமான் அணில்கள் என்றே விமர்சித்து வருகிறார். அணில் போல சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும் என விஜய் பேசி இருந்த சூழலில் அவரது தொண்டர்களை சீமான் அணில்கள் என்றே விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், சீமானை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அணில் பிரச்சனை தான் வேகமாக போயிட்டு இருக்கு என செல்வப்பெருந்தகை கேட்க அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியில் தெறிக்கவிட்ட விஜய்... ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி... விண்ணை பிளந்த சத்தம்..!