×
 

பஸ்களில் தமிழ்நாடு அரசு -னு எழுத என்ன தயக்கம்? மை தீர்ந்து போச்சா? சீமான் சரமாரி கேள்வி..!

தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன் என சீமான் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 'தமிழ்நாடு' பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். 

ஆரம்ப காலங்களில் 'தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம் என்றும் வண்ணப்பூச்சு தீர்ந்துவிட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு தெரியாமல் வண்ணப்பூச்சு ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன் என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: போராடும் செவிலியர்கள்.. ஒடுக்கும் காவல்துறை... இதெல்லாம் நியாயமா? சீமான் கண்டனம்..!

தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு., இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா என்று கேட்டார். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா என்று கேட்டுள்ள சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார் . இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா வெட்கக்கேடு என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக - 45%, தவெக - 7%, நாதக - 3%- திமுக தலையில் இடியை இறங்கிய முக்கிய சமூகம்... வெளியானது ஷாக்கிங் சர்வே ரிசல்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share