×
 

துவண்டு போன ஒப்பந்த தொழிலாளர்கள்… செவி சாய்க்காத துயரம்… சீமான் காட்டம்…!

பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சீமான் வலியுறுத்தி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் ஆயில் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மருத்துவக் காப்பீடு, கருணைத்தொகை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி, கடந்த 5 நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்க மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள சமையல் எரிகாற்று நிரப்பும் ஆலைகளுக்கு அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தின் மூலமே எரிகாற்றானது கொண்டு செல்லப்படுகின்றது. இந்த எரிகாற்று முனையத்தில் 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதார உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் அவர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றவில்லை என கூறினார்.

அதனைத் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் முன்னெடுத்தும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதால் தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படிங்க: நியாயமான கோரிக்கை தான்..! ஆசிரியர்கள் போராட்டத்திற்கு குரல் கொடுத்த சீமான்...!

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, கருணைத்தொகை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெற்றுத் தந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மாலி நாட்டு பயங்கரவாதிகளால் தமிழர்கள் கடத்தல்... வேடிக்கை பாக்குறீங்களா? சீமான் ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share