நியாயமான கோரிக்கை தான்..! ஆசிரியர்கள் போராட்டத்திற்கு குரல் கொடுத்த சீமான்...!
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
உரிய ஊதியம், ஊக்கத்தொகை, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் சென்னையில் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிகழ்வு மனவேதனை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் UGC நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர் பெருமக்களுக்கு முதுநிலைப் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
பணியில் உள்ள ஆசிரியர் பெருமக்களின் புத்தாக்கப் பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் இணைப்பேராசிரியர் பணி மேம்பாட்டிற்குப் பி.எச்.டி கட்டாயம் என்ற நிபந்தனையைத் தளர்த்திட வேண்டும் எனவும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசு… அண்ணாமலை கடும் கண்டனம்..!
மேலும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நீரா" வாக்குறுதியும் கானல் நீரா? என்ன முதல்வரே... வெளுத்து வாங்கிய நயினார்...!