எந்தக் கொம்பன் வந்தாலும் என் வெற்றியை தடுக்க முடியாது..! சீமான் திட்ட வட்டம்..!
எந்த கொம்பன் வந்தாலும் என் வெற்றியை தடுக்க முடியாது என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தாம்பரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று பேசி உள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்..!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு..!
இழப்பதற்கு உயிரைத் தவிர எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் சரி என் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நான் இந்த வேலையை செய்ய வந்தவன் கிடையாது என்று தெரிவித்துள்ள அவர் நான் சினிமா எடுத்து பஞ்சம் பிழைக்கு வந்தவன் என்று கூறினார். தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக்கை மூடுவேன் என்றும் கள்ளுக்கடை திறப்பேன் என்றும் கூறுவதை கண்டு பயப்படுகிறார்கள் எனவும் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 வருஷமா கத்தி கத்தி சாவுறோம்.. பரப்புரையில் சீமான் குமுறல்..!