×
 

காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

காவிரி நதிநீர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக கர்நாடகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய்யின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது போராடிப் பெற்ற உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய்யின் செயல் பெருத்த ஏமாற்றமளிப்பதாக சீமான் தெரிவித்தார். இந்தப் போக்கு பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயல் என அவர் குற்றஞ்சாட்டினார்.

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை என சீமான் சுட்டிக்காட்டினார். காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனத் தன்முனைப்பின் உச்சமாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கானத் தார்மீக உரிமையை மறுத்து வருவதே மறுக்கவியலா பேருண்மை என அவர் கூறினார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒருநாளும் ஏற்றதில்லை என அவர் நினைவுபடுத்தினார். முந்தையக் காலங்களில் காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்பட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: 151 இடங்கள் பறிபோனதே உண்மை..! வெற்றி கொண்டாட்டம் வெட்கக்கேடு... தவெகவை பந்தாடிய சீமான்..!!

பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என அவர் விளக்கினார். 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும் அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு என சீமான் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share