×
 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை கட்டாயப்படுத்துங்கள்...! அன்னை தமிழுக்கு துரோகம்... சீமான் ஆவேசம்..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பாண்டு பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 10 ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதது அன்னை தமிழுக்கு செய்கின்ற பெருந்துரோகம் என்றார். ஏற்கனவே, தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், குழந்தைகள் தாங்கள் வாழும் மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களின் நலனுக்கு மிகவும் நல்லது என்றும் மாறாக வாழும் மாநில மொழியைக் கற்றுக்கொள்ள மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல எனவும், இதனால் பிற மொழியினரின் எந்த உரிமையும் பறிபோய்விடாது எனவும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்நிலையில், இந்த ஆண்டு விலக்கு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது தமிழ் மொழி மீது சிறிதும் பற்றின்மையையே காட்டுகிறது என்றும் தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் பெற்று இயங்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகள், தமிழைக் கற்பிக்க மறுப்பதும், அதற்கு திமுக அரசு துணைபோவதும் தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்ற பெருந்துரோகம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு ஒத்து வராது...! முதல்வர் கருத்தால் கூட்டணிக்குள் பிளவா? செல்வப் பெருந்தகை ஓபன் டாக்...!

பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் இருக்கக்கூடாது, பள்ளிகளில் தமிழ்மொழித் தேர்வு இருக்க கூடாது என்று செயல்படுவதுதான் திமுகவின் தமிழ் பற்றா எனக் கேட்டார். இந்தி நெவர், இங்கலிஷ் எவர் என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றது என்றும் குற்றம்சாட்டினார். தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதை கைவிட்டு, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: விஜயை வைத்து காங்கிரஸ் பேரம்... அப்பவே திமுக அனுப்பி விட்டுருக்கணும்..! சீமான் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share