×
 

ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா? சும்மா பேசிட்டு இருக்காதீங்க..! சீமான் காட்டம்…!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் மூழ்கின. அது மட்டுமல்லாது அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை அரசு கொள்முதல் செய்யாததால் தெருக்களில் கொட்டும் நிலையும், தண்ணீரில் நெல்மணிகள் முளைக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் தாங்கள் வாழ்வாதாரம் எழுந்து தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மது பாட்டில்களை அரசு பாதுகாப்பாக அடுக்கி வைத்துள்ளது என்றும் ஆனால் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தெருவில் கொட்டி வைத்திருப்பதாகவும் கூறினார். தமிழக விவசாயிகள் விளைவித்த நெல்லை தெருவில் போட்டுவிட்டு ஆந்திராவில் இருந்து அரிசி வாங்குகின்ற என குற்றம் சாட்டினார். உணவு இல்லாமல் இறக்கும்போது தான் விவசாயியின் உழைப்பு தெரியவரும் என்று கூறினார்.

தெருவில் நெல்லை போட்டு விளைவிக்க வைப்பது தான் தமிழக அரசின் சாதனை என்று விமர்சித்தார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கும் அரசாங்கம் எல்லையில் நின்று தியாகம் செய்தவருக்கு கொடுக்கிறார்களா என கேட்டார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா என சீமான் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: சதுப்பு நிலத்தையும் விட்டு வைக்கல... ரூ. 2000 கோடி ஊழல்... விளாசிய சீமான்...!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதம் என்றும் மனிதப் புரட்சியை அடக்கினார்கள் எனவும் தெரிவித்தார் . ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு 35 லட்சமா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதை குறிப்பிட்டு பேசினார். 

இதையும் படிங்க: டீச்சரா? மிருகமா? சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர்… சீமான் கடும் கண்டனம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share