சொல்லுப்பா விஜய்..! நாடாளுமன்றத் தேர்தலில் களத்துக்கு வராதது ஏன்? சீமான் சாரமாரி கேள்வி...!
களத்துக்கு வராதவர்களோடு போட்டி போடும் ஐடியா கிடையாது என பேசிய விஜய்க்கு சீமான் பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளையடிக்காதீர்கள் என்று விஜய் பேசினார். தமிழக வெற்றி கழகத்தை ஒரு பொறுப்பே இல்லை எனக் கூறிக்கொண்டு கதறுகிறார்கள் என்றும் விமர்சித்தார். பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நம் கொள்கை எதிரி என்றும் எதிரிகளை அறிவித்துவிட்டு தான் களத்திற்கு வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார். எதிரிகள் யாரென்று சொல்லிக்கொண்டு களத்திற்கு வந்திருக்கும் நமக்கும் அவர்
களுக்கும் தான் போட்டி என்றும் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்கும் ஐடியா தனக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார் என கேள்வி எழுப்பினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் விஜய் களத்திற்கு வராதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அடக்குமுறையை கட்டவிழ்க்கும் திமுக... குப்பை கிடங்கை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு சீமான் ஆதரவு குரல்...!
வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை இருப்பதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலை சேர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மிகக் குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளதாகவும் சீமான் கூறினார்.
இதையும் படிங்க: மணல் திருட்டை எதிர்த்த விவசாயிகள் பொய் வழக்கில் கைது... நெஞ்சில் ஈரம் இருக்கா முதல்வரே?... சீமான் கண்டனம்...!