×
 

அவசர அவசரமாக SIR... 6 கோடி பேருக்கு வாக்குரிமை பறிபோகும்... சீமான் எச்சரிக்கை...!

அவசர அவசரமாக SIR கொண்டு வருவது ஏன் என சீமான் சரமாரி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ்ஐஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கொட்டும் மழையிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சீமான செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

திடீரென போலி வாக்காளர்களை கண்டுபிடித்தது போல பேசுவது ஏன் என்றும் கேட்டார். ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா என்றும் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரி பார்க்க முடியும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: வலுக்கும் எதிர்ப்பு... கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம்... SIR - க்கு எதிராக கண்டன முழக்கம்...!

ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எங்களைப் போன்ற வளர்ந்து வரும் கட்சியினர் எஸ் ஐ ஆர்- ஐ எப்படி எதிர்கொள்ள முடியும் என்றும் சீமான் கேட்டார். குறைந்தது ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு...! சீமான் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share