×
 

மூக்குத்தியில் எப்படி பிட்..? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடிகள்? கொதித்த சீமான்..!

நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் பேசியதாவது; நீட் தேர்வு முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. நீட் தேர்வு தரமான மருத்துவர்களை உருவாக்குகிறதா? அல்லது போலி மருத்துவர்கள் உருவாக்குகிறதா என்பதை உங்கள் முன் வைக்கிறேன். நீட் தேர்வை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறது. பயிற்சி மையங்கள் சம்பாதிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்வு எழுதுவதால் தரமான மருத்துவர்கள் வருவார்கள் என்பது பைத்தியக்காரத்தனமானது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவுகள் நிறைவேறவில்லை. மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா? தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்? பயோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம் நீட் தேர்வை நடத்துகிறது.,நமது நாட்டினரால் நடத்த முடியாதா? ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வு நடத்த முடியாதவர்களால் நாட்டிற்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? 

இதையும் படிங்க: பாதுகாப்பை வாபஸ் பெற்ற திமுக அரசு.. சகாயம் ஐஏஎஸ் உயிருக்கு ஆபத்து.. சீமான் கொந்தளிப்பு.!.

வசதி படைத்த மாணவன் மருத்துவனாகலாம்., கிராமப்புறங்களில் கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா? அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன திமுக இதுவரை என்ன செய்துள்ளது? மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வேண்டிய அவசியம் ஏன்? நீட் தேர்வுக்கு ஏற்ப ஆடை விற்கப்படும் என கடைகளில் போட்டுள்ளனர்..,

இது நாடா? நீங்கள் என்ன உரிமையை பாதுகாத்தீர்கள்? எங்கள் பிள்ளைகளை அழ வைத்து தேர்வு எழுத வைப்பதை விட மனித வதை ஏதேனும் இருக்குமா? என்ன மனநிலையில் தேர்வு எழுதுவார்கள்? படித்தவன் எப்படி மனதில் நிற்கும்... இவ்வாறு சீமான் பேசினார்.

இதையும் படிங்க: பாக். தாக்குதலுக்கு துடித்தவர்கள் இலங்கை தாக்குதலுக்கு கள்ள மௌனம் காப்பது ஏன்? சீமான் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share