வரமாட்டோம்..! ஆளுநர் விருந்தை புறக்கணிக்கும் தமிழக அரசு...! அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு..!
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மட்டுமல்லாது அமைச்சர்களும் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மாநில அரசு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல், குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்த சம்பவத்தில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இத்தகைய புறக்கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், குடியரசு தினமான இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பாரம்பரிய தேநீர் விருந்தை திமுக தலைமையிலான மாநில அரசு புறக்கணித்தது.
இந்த முடிவு, ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படுவதாக கருதப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஆளுநர் மாநில சட்டமன்றத்தை அவமதிப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக செயல்படுவது, தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான அரசியல் தலையீடுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த புறக்கணிப்பை அறிவித்தனர்.
குறிப்பாக, ஆளுநரின் சில அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாகவும், தமிழகத்தின் சுயாட்சிக்கு தொடர் துரோகம் இழைப்பதாகவும் கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன.இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது ஏற்கனவே உறுதியானது.
இதையும் படிங்க: இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை நிறைவு..! கடைசி நாளில் தலை காட்டாத அதிமுக உறுப்பினர்கள்..!
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தஞ்சையில் நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டுக்கு புறப்பட்டனர். இந்த நிலையில் தமிழக அமைச்சர்களும் ஆளுநரின் தேநீரில் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..!! தமிழ்நாட்டில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! தமிழக அரசு அதிரடி..!!