×
 

மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பரப்புரை தீவிரமடைந்து உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீண்டும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தொகுதி சென்னையின் வடபகுதியில் அமைந்துள்ளது. துறைமுகம், ஜார்ஜ் டவுன், கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. வணிக நடவடிக்கைகள், துறைமுகம் சார்ந்த பொருளாதாரம் மற்றும் அடர்த்தியான குடியிருப்புகள் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இதையும் படிங்க: "தேர்தல் வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றாத திமுக"..! இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

சேகர்பாபு ஏற்கனவே 2021 தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இப்போது மூன்றாவது முறையாக வெற்றி பெறும் இலக்குடன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.சமீப நாட்களில் சேகர்பாபு ஜட்காபுரம், கடற்கரை சாலை கிழக்குப் பகுதி, ஏழுகிணறு, ஸ்ட். சேவியர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அவரது பிரச்சார ஊர்வலத்தின்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்..!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share