×
 

துறைமுகம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு.. சிறுவர்களுடன் கேரம் விளையாடிய சேகர்பாபு..!

துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு வாக்குச் சேகரித்தார்.

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், இந்து அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே. சேகர் பாபு, தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தொகுதிக்கு உட்பட்ட காவலர் குடியிருப்புப் பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்தப் பிரச்சாரம், அமைச்சரின் மக்கள் நட்பு அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.காவலர் குடியிறுப்பில் வசிக்கும் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்ற சேகர் பாபு, அங்குள்ள மக்களுடன் உரையாடினார். ஒவ்வொரு வீட்டிலும் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவர், திமுக அரசின் சாதனைகளை விளக்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியான ஆதரவை கோரினார்.

மக்களின் குறைகளையும், அவர்களின் தேவைகளையும் பொறுமையாகக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். குடியிறுப்பு மக்கள் அவரை அன்புடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். சில இடங்களில் பூக்கள் தூவி, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.இந்த வீடு வீடாகச் செல்லும் பிரச்சாரத்தின் போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளுடன் சேகர் பாபு இணைந்து கேரம் விளையாடிய காட்சி மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.

இதையும் படிங்க: மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

இந்த நிகழ்வு, அரசியல் தலைவர்கள் மக்களோடு இணைந்து, குறிப்பாக எதிர்கால தலைமுறையினருடன் நெருக்கமாகப் பழகும் ஒரு அழகான தருணமாக பார்க்கப்பட்டது. சிறுவர்கள் அமைச்சருடன் விளையாடியதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். காவலர் குடியிறுப்பு பகுதியில் அவரது வருகை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் மத்தியில் நல்ல எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: நல்ல சிவம் ஜெயிக்கணும்..! என் தொகுதிக்கு கூட போகல... கோபிசெட்டிபாளையத்தில் உதயநிதி பரப்புரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share