×
 

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்... பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... செல்வப் பெருந்தகை கண்டனம்...!

100 நாள் வேலைத்திட்டத்தின் பெயர் மாற்றம் என்பது தரம் தாழ்ந்த அரசியல் முன்னெடுப்பு என செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும். கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது.

குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, சாலை அகலப்படுத்துதல் என பல்வேறு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பதின் பெயரை மாற்றி அமைக்க முடிவு செய்து இருப்பதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டித்துள்ளார்.

கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்வதற்கு வருகிற மக்களவை கூட்டத் தொடரில் மத்திய பா.ஜ.க. அரசு மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக செய்தி வெளிவந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி பல நேரங்களில் காந்தியடிகளை புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாலும் மகாத்மா காந்தியின் புகழை சிதைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலினால் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 100 நாள் வேலைத்திட்டத்தின் பெயர் இனி இதுதானா..!! மாற்றத்தை கொண்டு வந்த மத்திய அரசு..!!

கடந்த மக்களவை கூட்டத் தொடரின் போது இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற காரணத்தால் நவஇந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பா.ஜ.க. தலைவர்கள் இழிவுபடுத்தி பேசினார்கள் என்றும் மகாத்மா காந்தி பெயரில் இருக்கிற இத்திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்டுள்ளார். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்கிற வள்ளுவரின் வரிகளை பா.ஜ.க.வினக்கு நினைவூட்ட விரும்புவதாக தெரிவித்துள்ள செல்வப் பெருந்தகை, பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட் நச் தீர்ப்பு... நிலை நிறுத்தப்பட்ட கூட்டாட்சி தத்துவம்... செல்வப் பெருந்தகை கருத்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share