×
 

சுப்ரீம் கோர்ட் நச் தீர்ப்பு... நிலை நிறுத்தப்பட்ட கூட்டாட்சி தத்துவம்... செல்வப் பெருந்தகை கருத்து...!

ஆளுநர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்துவதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வாசித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மசோதா மீது காரணமே இன்றி முடிவெடுக்காவிடில் நீதிமன்றமே முடிவு எடுக்க முடியும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மசோதாவை நிராகரிக்கலாம் என்றும் ஆனால் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், மாநில சட்டமன்றம் மக்கள் இறையாண்மையின் தூணாகவும், ஜனநாயகத்தின் உயிர்துடிப்பாகவும் விளங்குகிறது. அந்த உயரிய அமைப்பு நிறைவேற்றிய மசோதாக்களை, எந்தவொரு காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரக் கொள்கைகளையும் வலுவாக உறுதிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 

மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுத்தும் சட்டங்களையும் கொள்கைகளையும் தடுக்கும் வகையில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது என்பது அரசியலமைப்பின் ஆன்மாவின் நோக்கத்துக்கு முழுமையாக முரண்படுவதாகும் என்பதை இன்றைய தீர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார். சட்டமன்றத்தின் ஒவ்வொரு முடிவும் மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடே என்பதை இந்த தீர்ப்பு மறுபடியும் அனைவருக்கும் உணர்த்துகிறது என்றும் இந்த தீர்ப்பு மாநிலங்களின் உரிமை, மக்கள் ஆட்சியின் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னோட்டம் எனவும் தெரிவித்தார்.  

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகவும் அரசியலமைப்பை மதிக்கும் பண்பும், கூட்டாட்சி மரபுகளைக் காக்கும் பொறுப்பும் அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: 2026லும் திமுகவுடன் தான் கூட்டணி.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share