வருமான வரி சோதனை..! ஆதாரங்களை வெளியிட்ட செல்வப் பெருந்தகை..!
வருமான வரி சோதனை நடந்ததாக ஆதாரங்களை செல்வபெறுந்தொகை வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வருமான வரி சோதனை விவகாரத்தில் தனது தரப்பு ஆதாரங்களை இன்று வெளியிடுவதாக அறிவித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது, தன்னை அரசியல் ரீதியாக முடக்கும் வகையில் தன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக செல்வப்பெருந்தகை முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: "கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தபோது, என்னை அரசியல் ரீதியாக முடக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நான் தங்கியிருந்த இடங்கள். எனது அலுவலகம் மற்றும் கூட்டணி கட்சியினரின் வீடுகளில் திடீர் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகையால் தான் காங்கிரஸை விட்டு விலகினேன் - விஜயதரணி ஆவேசம்!
இந்த சம்பவங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படையாக எடுத்துரைத்ததாகவும், ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் அதை முழுமையாக மறுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். "உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க, இந்த சம்பவங்கள் தொடர்பான முழு ஆதாரங்களை இன்று வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்" என்று அவர் அறிக்கையில் வலியுறுத்தினார்.
சென்னையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மணிமங்கலத்தில் ஓட்டு போட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "எனக்கு உண்மையைச் சொல்ல எந்த தடையும் இல்லை. சட்ட ரீதியாக எதையும் எதிர்கொள்ள தயார். யார் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதை இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து, வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களுடன் வெளியிடுவேன்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஐடி ரெய்டு நடந்ததற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். தனது ஆதரவாளர்களான நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தேர்தலுக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு!