×
 

தேர்தலுக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாட்டு பிள்ளை இல்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக மீண்டும்  இருப்பேன்.தேர்தல் முடிவிக்கு பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் செல்வபெருந்தகை பேட்டி.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாங்காட்டில் இன்று நடைபெற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் முடிவுகளுக்குப் பின் தனது கட்சிப் பதவியைத் துறக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் வீட்டுப் பிள்ளையாக இருந்த என்னை, காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உயர்த்தி, 'தமிழ்நாட்டின் பிள்ளை'யாக மாற்றியது. தற்போது தேர்தல் பணிச் சுமைகள் மற்றும் தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் மாநிலத் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன். மீண்டும் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே மாறி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு முழுநேரப் பணியாற்றுவேன் என அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக (CLP Leader) இருந்த தான், தலைவர் பதவி வந்தவுடன் ஏற்பட்ட பணிச் சுமை காரணமாகவே அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதாகக் குறிப்பிட்டார். ராகுல் காந்தி அவர்கள் தன்னிடம் எந்தப் பதவியைக் கேட்டாலும் தருவார், நினைத்தால் இன்னும் 5 ஆண்டுகள் கூடத் தலைவராக இருக்கலாம். ஆனால், எனக்கு எனது தொகுதி மக்களே முக்கியம் என அவர் உருக்கமாகப் பேசினார்.

இதையும் படிங்க: "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

ராகுல் காந்தி அவர்கள் கூறியது போல், தமிழகத்தில் பாஜக ஒருபோதும் கால் ஊன்ற முடியாது. பாஜக-வின் முகமூடியை அணிந்து கொண்டு வரும் அதிமுக-வைத் தோற்கடிக்க வேண்டும். வருகின்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்கும் அளவுக்கு எங்களது வெற்றி அமையும் என அவர் சவால் விடுத்தார்.

மாநில அளவில் பெரிய பொறுப்புகள் இருந்தாலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதையே தனது முதல் கடமையாகக் கருதுவதாக அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். தேர்தலுக்குப் பின் முழு நேரமும் தொகுதியிலேயே தங்கிப் பணியாற்றப் போவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

செல்வப்பெருந்தகையின் இந்தத் திடீர் அறிவிப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share