×
 

கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் என்று வதந்தி பரப்பி குளிர் காய வேண்டாம் என செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து இப்போது உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 4 அன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளில் 28 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.இது கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளை விட 3 தொகுதிகள் அதிகமாகும். நீண்ட காலம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையில் இரு கட்சிகளும் உடன்பாடு எட்டின. 

இருப்பினும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடத்தி வரும் சூழ்நிலையில் எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக எதையாவது கொளுத்தி போட்டு குளிர் காயாதீர்கள் என்ற செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை 33 சதவீதம் பெண்கள் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு ராகுல் காந்தி நிச்சயம் வருவார் என்று உறுதி அளித்தார். வழிகாட்டு நெறிமுறை காரணமாக ராகுல் காந்தி பரப்புரை பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தமிழ்நாட்டில் பரப்புரை செய்வார் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share