காவிச் சிந்தனையில் பழனிச்சாமி... வள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கிழித்து தொங்கவிட்ட செல்வப் பெருந்தகை..!
எடப்பாடி பழனிச்சாமி காவிச் சிந்தனைகள் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவரைப் பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உருவம் வெள்ளை வஸ்திரம் அணிந்த, எளிமையான தோற்றத்தில் இருப்பது வழக்கம். அதனால், காவி நிறம் போன்றது சிலருக்கு "சனாதன மத அடையாளத்தை" திணிப்பது போலத் தோன்றியது. இதனால், "திருவள்ளுவரை காவிமயமாக்க முயற்சி" என்ற விமர்சனங்கள் எழுந்தன.
திருவள்ளுவருக்கு காவி நிற அணிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டது பாஜகவுடன் அதிமுக வைத்துள்ள கூட்டணியை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முழு சங்பரிவாராகவே எடப்பாடி பழனிச்சாமி மாறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூட விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், காவி சிந்தனையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதையும் படிங்க: பிரேமலதாவின் சிறப்பான முடிவு... வலுவான கூட்டணி... செல்வப் பெருந்தகை வரவேற்பு..!
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல என்றும் அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் என்றும் கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: கொளுத்திப்போட்ட மாணிக்கம் தாகூர்..! கூட்டணிக்குள் புகைச்சல்.. கார்கேவிடம் முறையிட போவதாக செல்வப் பெருந்தகை தடாலடி..!