கொளுத்திப்போட்ட மாணிக்கம் தாகூர்..! கூட்டணிக்குள் புகைச்சல்.. கார்கேவிடம் முறையிட போவதாக செல்வப் பெருந்தகை தடாலடி..!
மாணிக்கம் தாகூர் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் பேசப்போவதாக செல்வ பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் திமுக குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருவது இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு போன்ற விஷயங்கள் விவாதமாக இருக்கும் நிலையில், இந்தப் பேச்சுகள் கூட்டணியின் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கின்றன.
மாணிக்கம் தாகூர் மதுரையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசியபோது, திமுக தரப்பில் இருந்து வரும் சில கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்களை மிகவும் வலியுறுத்துவதாகவும், அவர்களை அவமதிப்பதாகவும் உணர்வதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்எல்ஏ தளபதி போன்றோர் காங்கிரஸ் கட்சியின் பலம் குறித்து விமர்சித்தபோது எழுந்த கோபத்தை அவர் வெளிப்படுத்தினார்.
ஆட்சியில் அதிகார பகிர்வு அவசியம் என்றும், அது காங்கிரஸின் உரிமை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆட்சி பங்கு எங்கள் உரிமை, மக்கள் தீர்மானிப்பார்கள் என்ற அவரது கருத்து திமுக தலைமையை மறைமுகமாக சீண்டுவதாகவே பார்க்கப்படுகிறது. அவசர அவசரமாக செல்வப் பெருந்தகை டெல்லி செல்ல இருப்பதாக கூறப்பட்டது. மாணிக்கம் தாகூர் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் பேசவே டெல்லி செல்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை சீண்டும் மாணிக்கம் தாகூர்... அவசரகதியில் டெல்லிக்குச் செல்லும் செல்வப் பெருந்தகை..!
மாணிக்கம் தாகூர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன காருகேவை சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு என மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்தார். ஆட்சியில் பங்கு என்ற மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு ஒத்து வராது...! முதல்வர் கருத்தால் கூட்டணிக்குள் பிளவா? செல்வப் பெருந்தகை ஓபன் டாக்...!