கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச்சு... காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப் பெருந்தகை எச்சரிக்கை...!
கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளை செல்வப் பெருந்தகை எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் இணையும் என்றும் பரவலாக தகவல் பேசு பொருளாக மாறியது. இதனை தவிர்க்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி தொடர்பாக பேச வேண்டாம் என்றும் உங்கள் கருத்துக்களை தலைமையிடம் கூறுங்கள் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவது வரைமுறையற்ற செயல் என்றும் கண்டனம் தெரிவித்தார். கூட்டணி குறித்து தலைமை இடத்தில் கூறுவது தானே முறையாக இருக்கும் அதை விடுத்து பொதுவெளியில் பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கேட்டுள்ளார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தனியாக பேசுவது ஏற்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். கூட்டணி பேச்சு வார்த்தைக்காக குழு அமைத்து உள்ளதாகவும் அதனை குழு பார்த்துக்கொள்ளும் என்றும் செல்வப் பெருந்தகை கூறினார்.
இதையும் படிங்க: கூட்டணி பற்றி பொதுவெளியில் பேச காங்கிரசாருக்கு கட்டுப்பாடு... கறார் காட்டிய செல்வபெருந்தகை..!
கூட்டணி குறித்து நிர்வாகிகளுக்கு கருத்து இருந்தால் தலைமையிடம் தான் கூற வேண்டும் என்றும் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாகவும் இதை பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெளிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆணவத்தின் உச்சியில் கொக்கரிக்கும் அமித் ஷா…! ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? செல்வப் பெருந்தகை கொந்தளிப்பு..!